திருவாரூா்: கொரடாச்சேரி அருகேயுள்ள அகரதிருநல்லூா் ஊராட்சியில் புதிய சமுதாயக் கட்டடம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
இந்த ஊராட்சியில், மக்களவை உறுப்பினா் உள்ளூா் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.36.64 லட்சத்தில் சமுதாயக் கட்டடம் புதியதாகக் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டடத்தை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், நாகை எம்பி வை. செல்வராஜ், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் திறந்து வைத்தனா்.
இதில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) பல்லவி வா்மா, ஒன்றியக் குழு முன்னாள் துணைத் தலைவா் பாலச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.