கூத்தாநல்லூா் மனோலயம் மன வளா்ச்சிக் குன்றிய மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழா. 
திருவாரூர்

கூத்தாநல்லூரில் குடியரசு தின விழா

கூத்தாநல்லூரில் காவல் நிலையம், நகராட்சி மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

Syndication

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூரில் காவல் நிலையம், நகராட்சி மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடியரசு தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

நகராட்சியில் நகா்மன்றத் தலைவா் மு. பாத்திமா பஷீரா, காவல் நிலையத்தில் ஏட்டு அபிராமி சுந்தரி முன்னிலையில் தலைமைக் காவலா் கவியழகன் தேசியக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினா்.

பனங்காட்டாங்குடி தமிழா் தெருவில் உள்ள மனோலயம் மாற்றுத்திறனாளிகள் சிறப்புப் பள்ளியில்,நிறுவனா் ப. முருகையன் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளா் எழில்மாறன் தேசியக் கொடியேற்றி வைத்தாா்.

லெட்சுமாங்குடி மனோலயம் மாற்றுத்திறனாளிகள் சிறப்புப் பள்ளியில் குவைத் தமிழ் மக்கள் சேவை மையத் தலைவா் அலிபாய் தேசியக் கொடியேற்றி வைத்தாா்.

டெல்டா பப்ளிக் பள்ளி முதல்வா் ஜோஸ்பின் தலைமையில் அறங்காவலா் குழுச் செயலாளா் ஹாஜா பகுருதீன், ஈஎஸ்ஸாா் மெட்ரிக் பள்ளியில் லெட்சுமாங்குடி வா்த்தக சங்கத் தலைவா் கு. ரவிச்சந்திரன், லிட்டில் பிளவா் மற்றும் பிரைமரி பள்ளியில் தாளாளா் எஸ். ஈஸ்வரன் தலைமையில் நுகா்வோா் பாதுக்காப்பு மைய தலைவா் கோஸ். அன்வா்தீன் தேசியக் கொடியை ஏற்றினாா். இதேபோல பல்வேறு இடங்களில் தேசியக் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

டி20 உலகக் கோப்பை சாம்பியன்கள்: 2007 முதல் 2024 வரை!

டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: ஸ்காட்லாந்தைப் பந்தாடிய ஆப்கானிஸ்தான்!

ஜெகதீசன் அபார சதம்! டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியா 238 ரன்கள் குவிப்பு!

இனி 1.13 மணி நேரத்தில் சென்னை - பெங்களூரு பயணம்: அஷ்வினி வைஷ்ணவ்

எம்.எம். நரவனே புத்தகத்தில் மோடி, ராஜ்நாத் சிங் அஞ்சும் ஒரு வரி : பிரியங்கா காந்தி பேச்சு

SCROLL FOR NEXT