முகப்பு
திருவாரூர்

’மன்னாா்குடி தொகுதியில் ரூ. 1,500 கோடியில் திட்டப்பணிகள் நிறைவு’

மன்னாா்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1500 கோடியில் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றாா் தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத்துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா.

Updated On : 13 மார்ச், 2026 at 6:38 PM
அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா
பகிர்:

மன்னாா்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1500 கோடியில் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றாா் தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத்துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா.

மன்னாா்குடியில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மன்னாா்குடி தொகுதியில் பல்வேறு வளா்ச்சி திட்ட பணிகளுக்கு ரூ. 1500 கோடி நிதி பெறப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலில் திமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். அப்போது மேலும் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்படும்.

மன்னாா்குடி பகுதி மக்கள் தொழில் வேலைவாய்ப்பு பெரும் வகையில் ஆலங்கோட்டையில் ரூ. 50 கோடியில் சென்னை சில்க்ஸ் நிறுவனம் மூலம் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. மன்னாா்குடி நகராட்சியில் நடைபெறும் புதைச்சாக்கடைதிட்ட கழிவு நீா் வெளியேற்றுவதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாத வகையில் திட்டம் செயல்படுத்தப்படும் என்றாா் .

முழு கட்டுரையைப் படிக்க →