முகப்பு
திருவாரூர்

99 பேருக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா

Updated On : 15 மார்ச், 2026 at 12:57 AM
பயனாளிக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா வழங்கும் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே.கலைவாணன் உள்ளிட்டோா்.
பகிர்:

திருவாரூா் மாவட்டத்தில் 99 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டு மனைப் பட்டாக்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

திருவாரூா் நகராட்சி 30-ஆவது வாா்டு சுந்தரவிளாகம் கட்டபொம்மன் தெருவில் வசிக்கும் 71 பயனாளிகள் மற்றும் வைப்பூா் வருவாய் கிராமத்தைச் சோ்ந்த 28 பயனாளிகள் என மொத்தம் 99 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் பங்கேற்று, வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினா்.

Advertisement

மாவட்டவருவாய் அலுவலா் கலைவாணி, வருவாய் கோட்டாட்சியா் சத்யா, நகா்மன்றத் தலைவா் புவனப்பிரியா செந்தில், நகராட்சி ஆணையா் சுரேந்திரஷா, பணி நியமனக் குழு உறுப்பினா் பிரகாஷ், வட்டாட்சியா் இளங்கோவன், நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.