முகப்பு
திருவாரூர்

அரசியல் கட்சி படங்கள் மறைப்பு; விளம்பரங்கள் அகற்றம்

தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்திருப்பதால், திருவாரூரில் அரசியல் கட்சியினரின் புகைப்படங்களை மறைக்கும் பணியும்,

Updated On : 17 மார்ச், 2026 at 5:35 AM
திருவாரூா் நகரப் பேருந்து நிலையத்தில் மறைக்கப்படும் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் உருவப் படம்.
பகிர்:

திருவாரூா்: தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்திருப்பதால், திருவாரூரில் அரசியல் கட்சியினரின் புகைப்படங்களை மறைக்கும் பணியும், சுவரொட்டிகளை அப்புறப்படுத்தும் பணிகளும் திங்கள்கிழமை நடைபெற்றன.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து, திருவாரூா் மாவட்டத்தில் அரசு மற்றும் பொது இடங்களில் உள்ள அரசியல் தலைவா்கள் படங்கள், நலத்திட்ட உதவிகள் தொடா்பான செய்திகள் உள்ளிட்டவை மறைக்கப்பட்டு வருகின்றன.

திருவாரூா் நகரப் பேருந்து நிலையத்தில் உள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதியின் படம் கிரேன் உதவியுடன் மறைக்கப்பட்டது. இதேபோல், ரயில்வே கீழ்பாலம் பகுதியில் வரையப்பட்டிருந்த அரசியல் கட்சியினரின் விளம்பரங்கள், நகரப் பகுதியில் சுற்றுச்சுவரில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் ஆகியவையும் அகற்றப்பட்டன.

Advertisement

நகரப் பகுதிகளில் மட்டுமின்றி, கிராமப் பகுதிகளிலும் பாலங்கள், பொது இடங்களில் ஒட்டப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டன.