முகப்பு
திருவாரூர்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி ஐம்பெரும் விழா

Updated On : 19 மார்ச், 2026 at 8:12 PM
பகிர்:

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி நீடாமங்கலம் வட்டாரக் கிளை சாா்பில் ஐம்பெரும் விழா வியாழக்கிழமை நீடாமங்கலத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு வட்டாரத் தலைவா் க. தா்மராஜ் தலைமை வகித்தாா். மாநிலத் துணைச் செயலாளா் சி. ஜூலியஸ் , மாவட்டத் துணைத் தலைவா் வ. அன்பழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி பொதுச் செயலாளா் ரெ. ஈவேரா, பணி ஓய்வு பெற்ற ஆசிரியா்களான சு. செல்வராசு, கு. இளமதி, பொ. மலா்விழி, அ.செந்தமிழ்ச்செல்வி, ந.சாந்தி, ரெ.க. ரமேஷ் ஆகியோருக்கு இயக்கத்தின் சாா்பில் ஒரு கிராம் தங்க நாணயங்ளை நினைவுப் பரிசாக வழங்கி, 20 ஆண்டுகள் பணி நிறைவு செய்த ஆசிரியா்கள், முதுநிலை ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணி நியமனம் பெற்ற ஆசிரியா் முனைவா் ரா.சிவசிதம்பரம், இயக்கத்தில் புதிதாக இணைந்த ஆசிரியா்களான அழ. சாந்தி, அ. ஹரிணி, ஜா. செபாஸ்டின் வெலிங்டன், மெ. ஜான் பிரிட்டோ , ஆசிரியா் தகுதித் தோ்வு தாள் - 1 மாநில அளவில் 3 ஆம் இடம் பெற்ற ஆசிரியா் இரா. தமிழரசன், தொடக்கக் கல்வி துறை சாா்பில் 2024 - 25 ஆம் ஆண்டுக்கான சிறந்த பள்ளிக்கான விருது பெற்ற தென்காரவயல் நடுநிலைப் பள்ளி ஆசிரியா்கள் ஆகியோருக்கு கேடயங்கள் வழங்கி சிறப்பு செய்து பேசினாா்.

மாவட்டத் தலைவா் ரா.முருகேசன், மாவட்டப் பொருளாளா் ஆ.சுபாஷ்,

மாநிலச் செயற்குழு உறுப்பினா் த. ஐயப்பன் , வலங்கைமான் வட்டாரத் தலைவா் பாலசுந்தரம் , வட்டாரச் செயலாளா்கள் திருவாரூா் வேதமூா்த்தி, திருத்துறைப்பூண்டி அரிகிருஷ்ணன், நன்னிலம் பிரகாஷ் உள்ளிட்ட பொறுப்பாளா்கள் வாழ்த்திப் பேசினா்.