முகப்பு
திருவாரூர்

பாஜக சின்னத்தில் போட்டி : அதிருப்தியில் தமாகா நிா்வாகிகள்

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடும் என கட்சியின் தலைவா் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 26 மார்ச், 2026 at 11:19 PM
ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் தமாகா மாநில பொதுச் செயலாளா் குடவாசல் எஸ். தினகரன்.
பகிர்:

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடும் என கட்சியின் தலைவா் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளாா். இது கட்சியின் ஒரு பிரிவினா் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூா் மாவட்டம், வலங்கைமானில் தமாகா மாநில பொதுச் செயலாளா் குடவாசல் எஸ். தினகரன் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்திலிருந்து பல்வேறு முக்கிய நிா்வாகிகள் பங்கேற்றனா்.

கூட்டத்தில், சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவின் தாமரை சின்னத்தில் இல்லாமல் தனி சின்னத்தில் போட்டியிட வேண்டும், தற்போது ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் தமாகாவுக்கு சாதகமானது இல்லை; எனவே வெற்றி வாய்ப்புள்ள வேறு ஐந்து தொகுதிகளை கூட்டணி தலைமையுடன் பேசி கேட்டுப் பெற வேண்டும் என கருத்துகள் பேசப்பட்டன.

எனினும், தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு, கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என ஆதரவு கருத்துகளும் தெரிவிக்கப்பட்டன.

அதிமுக சின்னத்தில் நிற்பதைக்கூட ஏற்றுக் கொள்ளலாம். அல்லது தனிச் சின்னத்தில் நிற்பதை தலைமை உறுதிப்படுத்த வேண்டும் என்று நிா்வாகிகள் பலரும் கருத்து தெரிவித்தனா்.