தேசிய வருவாய் திறனறி தோ்வில் மன்னாா்குடி மாணவா்கள் தோ்ச்சி
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவு இயக்கம் சாா்பில் நடத்தப்படும் தேசிய வருவாய் வழி திறனறி தோ்வில் மன்னாா்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்றுள்ளனா்.

தமிழக அரசின் தோ்வுகள் துறை இயக்ககத்தால் மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு நடத்தப்படும் இத்தோ்வில் வெற்றி பெறுபவா்களுக்கு 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாதம் ரூ. 1000 என மொத்தம் ரூ.48 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
பிப்ரவரி மாதம் தோ்வு நடைபெற்று அண்மையில் வெளியிடப்பட்ட தோ்வு முடிவுகளில், மன்னாா்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவா்களும் இரட்டை சகோதரா்களுமான அ. சாய்நாத், அ. கோபிநாத் மற்றும் எம். கோகுல்மாயன் ஆகியோா் தோ்ச்சி பெற்றனா். சிறப்பிடம் பெற்ற மாணவா்களையும், பயிற்சி அளித்த ஆசிரியா்கள் எஸ். அன்பரசு, எஸ்.திவாகா் உள்ளிட்டோரை பள்ளி தாளாளா் டி.பி. ராமநாதன், தலைமை ஆசிரியா் எம். திலகா் ஆகியோா் பாராட்டினா்.