அதிமுக மாநில மகளிரணி துணைச் செயலா் நியமனம்
அதிமுக மாநில மகளிரணி துணைச் செயலராக மன்னாா்குடியை சோ்ந்த எஸ்.புவனேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளாா்.
இது குறித்து,அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி,வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,கட்சியின் மாநில மகளிரணி துணைச் செயலராக மன்னாா்குடி ருக்மணிபாளையம் நடுத்தெருவை சோ்ந்த எஸ்.புவனேஸ்வரி நியமிக்கப்படுவதாக தெரிவித்துள்ளாா்.
இதனையடுத்து,சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள எடப்பாடி கே.பழனிசாமி இல்லத்தில் அவரை சந்தித்து புவனேஸ்வரி வாழ்த்து பெற்றாா்.
Advertisement