வாழையடி வாழையாக...
மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றில் உணவு எவ்வளவு முக்கியமோ, அதேபோன்று உணவைப் பரிமாறப் பயன்படுத்தப்படும் பொருள்களும் முக்கியமாகின்றன. மரங்கள் அடர்ந்த தோப்பு, வயல்வெ
மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றில் உணவு எவ்வளவு முக்கியமோ, அதேபோன்று உணவைப் பரிமாறப் பயன்படுத்தப்படும் பொருள்களும் முக்கியமாகின்றன.
மரங்கள் அடர்ந்த தோப்பு, வயல்வெளி நிறைந்த பசுமையான சூழலில் உணவை உட்கொள்ளும்போது வழக்கத்தைவிட அதிகமாக சாப்பிடத் தூண்டுவது ஏன்? அதை நன்கு அறிந்துதான் வாழை இலையில் உணவைப் பரிமாறுவதற்கு பழக்கினார்கள் நம் மூதாதையர்!
பசுமைத் தேயிலை எனப்படும் கிரீன் டீ-யில்கூட ங்ல்ண்ஞ்ஹப்ப்ர்ஸ்ரீஹற்ண்ர்ய் ஞ்ஹப்ப்ஹற்ங் (உஎஇஎ) எனும் புற்றுநோய் எதிர்ப்புப் பொருள் உள்ளது. வாழை இலையிலும் இந்த இஜிசிஜி உள்ளதாகக் கூறப்படுகிறது.
இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உணர்ந்து நம்மைப் பழக்கப்படுத்தி வந்துள்ளனர் நம் முன்னோர்கள்.
ஆனால், மாறிவரும் காலச்சூழல், நாகரிக மாற்றம், அவசரகதி ஆகியவை காரணமாக காகிதம், பாலிதீன், பிளாஸ்டிக், அலுமினியம் ஃபாயில் போன்றவற்றில் உணவுகளைப் பரிமாறியும், மடித்துக் கட்டியும் பயன்படுத்தும் நிலை உள்ளது. நவீனக் காலம் வாழை இலையை மறந்து பேப்பர் இலைக்கு மாறியும் வருகிறது. வாழை இலை வெறும் சம்பிரதாயப் பொருளாக மாறிவருகிறது.
இது காலத்தின் கட்டாயமா? நவீன நாகரிகம் என்ற பெயரில் மனிதர்களே நோய்களைத் தானே வழியச் சென்று வரழைத்துக் கொள்ளும் போக்கா?
இன்றும்கூட பாரம்பரிய உணவுக் கடைகளில் வாழை இலையில்தான் உணவுகள் பரிமாறப்படுகின்றன. கோயில்களிலும், வீடுகளிலும்கூட வாழை இலையில்தான் உணவு படைக்கப்படுகிறது.
மரபைக் கடைப்பிடித்து வரும் கலாசாரத்தைப் பேணுவோர் வாழை இலை மகத்துவம் உணர்ந்து வீட்டில் வாழைத் தோட்டம் போடுவதையும், வாழை இலையில் உணவு உண்பதையும் கடைப்பிடித்து வருகின்றனர். இதனால், வாழை இலையின் பயன்பாடு கணிசமாக இருந்து வரத்தான் செய்கிறது.
மதுரை, திண்டுக்கல்லில் இருந்து...
தலைநகர் தில்லியில் கடந்த மூன்று தலைமுறைகளாக வாழை இலை வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் டி.மூக்கன் என்பவரின் குடும்பத்தினர்.
மதுரை, திண்டுக்கல் மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாழை இலைக் கட்டுகளைக் வரவழைத்து தில்லியில் விற்பனை செய்து வருகின்றனர்.
தில்லியின் கிழக்குப் பகுதியில் திரிலோக்புரியின் 22-ம் பிளாக்கில் காலை முதல் மாலை வரை குடும்பமாக வாழை இலையை பல விதங்களில் வடிவமைத்து கடைகளுக்கும், உணவு விடுதிகளுக்கும் அனுப்பி வருகின்றனர்.
தலை வாழை வியாபாரம் தலைநகரில் எப்படி இருக்கிறது என்பது குறித்து வாழை இலைகளைப் பிரித்துக் கட்டுவதில் மும்முமாக ஈடுபட்டிருந்த நடராஜன், இளையராஜா, மணி, ராஜா, ஆகியோரிடம் பேசினோம்.
""இத்தொழிலை மூக்கன் நடத்தி வருகிறார். திண்டுக்கல்லில் இருந்து இலைக் கட்டுகளை ரயிலில் ஏற்றி அனுப்பி வைப்பார். அதை நாங்கள் பிரித்து வெவ்வேறு வடிவங்களில் உணவுக் கடைகளுக்கும், கேட்டரிங் மையங்களுக்கும் அனுப்பி வைப்போம்.
குளிர்காலத்தில் விற்பனை நன்றாக இருக்கும். வெயில் காலத்தில் இலை
வாடிவிடும் என்பதால் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது.
எனினும் வாடிக்கையாளர்களின் தேவை உணர்ந்து விற்பனை செய்கிறோம். கரோல்பாகிலும் எங்களுக்கு கடை உள்ளது.
தில்லியில் வாழை இலை உற்பத்தி அவ்வளவாக இல்லை. தொடக்கத்தில் ஹரியாணாவில் இருந்து வாழை இலைகளை கொள்முதல் செய்து வந்தோம்.
நாட்டு வாழை இலை நல்ல தரம் உள்ளதாக இருக்கும் என்பதால், 25 ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்துதான் வாழை வாங்கி வருகிறோம்.
வாரத்திற்கு மூன்று நாள்கள் ரயிலில் வாழைக் கட்டுகள் எடுத்து வரப்படும். ஒரு கட்டுக்கு 250 இலைகள் இருக்கும்.
வட்டம், சதுரம் என பல்வேறு வடிவங்களிலும் இலைகளை அழகாக வெட்டி கடைகளுக்கும், கேட்டரிங் நிறுவனங்களுக்கும், குருவாயூரப்பன் கோயில், மலைமந்திர் கோயில் போன்றவற்றுக்கும் விற்பனை செய்து வருகிறோம்.
இத்தொழிலில் எங்களது குடும்பத்தினர் 20 பேர் ஈடுபட்டு வருகிறோம். ரயில்களில் இலைகளைக் கொண்டு வருவது மிகவும் சிரமமாக இருக்கிறது.
ரயில் பெட்டிகளில் மாம்பழம், இலை போன்ற அழுகும் பொருள்களுக்குத் என தனி இடம் ஒதுக்கித் தந்தால் நன்றாக இருக்கும்.
தினசரி 10,000 இலைகள் விற்பனை
தில்லியில் மட்டும் தினசரி 10,000 வாழை இலைகள் விற்பனையாகின்றன.
முக்கியப் பிரமுகர்களின் வீடுகளுக்கும் எங்களது கடையில் இருந்து இலைகளை கேட்டரிங் சர்வீஸ் மூலம் அனுப்பி வருகிறோம்.
சண்டீகர், ஹரித்துவார், ரிஷிகேஷ், ஆக்ரா உள்ளிட்ட பகுதிகளுக்கும் வாழை இலைகளை அனுப்புகிறோம்'' என்றனர்.
வாழை இலைகளை அடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மூக்கனின் மனைவி பாண்டியம்மாள் கூறுகையில், ""எனது கணவரின் தாத்தா காலத்தில் இருந்தே வாழைத் இலை விற்கும் தொழில் செய்து வருகிறோம்.
எங்களுக்குத் இந்தத் தொழில் மீது உள்ள ஈடுபாடுதான் இதை மூன்று தலைமுறைகளாகத் தொடரச் செய்கிறது'' என்றார்.