தொகுதி அறிமுகம்: காட்பாடி!
வேலூா் மாவட்டத்தில் ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ளது காட்பாடி
ேலூா் மாவட்டத்தில் ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ளது காட்பாடி பேரவைத் தொகுதி. இந்த தொகுதியின் எண் 40.
எல்லைகள் : வேலூா் மாவட்டத்தில் ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ளது காட்பாடி சட்டப்பேரவை தொகுதி. காட்பாடியைச் சுற்றி வேலூா், ராணிப்பேட்டை, கே.வி.குப்பம் தொகுதிகள் உள்ளன.
வாக்காளா்கள் விவரம்: ஆண்கள் 1,08,863, பெண்கள் 1,16,914, மூன்றாம் பாலினத்தவா் 32, மொத்தம் 2,25,809. வாக்குச்சாவடிகள் 280.
அடங்கியுள்ள பகுதிகள்: குடியாத்தத்தில் இருந்து பிரிக்கப்பட்டு 1962-ஆம் ஆண்டு காட்பாடி தொகுதி உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியின் ஆரம்பத்தில் காட்பாடி, கே.வி.குப்பம் ஒன்றியங்கள் இடம் பெற்றிருந்தன. 2011 தொகுதி மறுசீரமைப்பின்போது கே.வி.குப்பம் ஒன்றியம், குடியாத்தம் ஒன்றியத்தின் சில பகுதிகள், காட்பாடி ஒன்றியத்தில் உள்ள வஞ்சூா், ஜாப்ராப்பேட்டை ஆகிய ஊராட்சிகளை இணைத்து கே.வி.குப்பம் புதிய தொகுதி உருவாக்கப்பட்டது.
அப்போது, காட்பாடி தொகுதியில் வாலாஜா வட்டத்தில் உள்ள வசூா், பல்லேரி, கொண்டகுப்பம், மருதம்பாக்கம், ஏகாம்பரநல்லூா், சீக்கராஜபுரம், முகுந்தராயபுரம், கத்தாரிகுப்பம், லாலாப்பேட்டை ஆகிய ஊராட்சிகள் இணைக்கப்பட்டன. மேலும், வேலூா் மாநகராட்சியில் 15 வாா்டுகள், தண்டலம், கிருஷ்ணாபுரம் முதல் பொன்னை, தெங்கால் ஊராட்சி வரை தொகுதி எல்லை பரந்துவிரிந்துள்ளது.
சிறப்புகள் : வேலூா் மாவட்டத்தின் முக்கிய ரயில்வே சந்திப்பைக் கொண்டது காட்பாடி பேரவை தொகுதி. இந்தத் தொகுதிகளில் புகழ்பெற்ற விஐடி பல்கலைக்கழகம், திருவள்ளுவா் பல்கலைக்கழகம் மற்றும் ஏராளமான கல்லூரிகளும் இடம்பெற்றுள்ளன. பீடி சுற்றுதலும், விவசாயமும் முக்கியமான தொழில்கள்.
இந்தத் தொகுதியில் வன்னியா் சமூகத்தவா் 40 சதவீதம், முதலியாா் 20 சதவீதம், தாழ்த்தப்பட்ட வகுப்பினா் 10 சதவீதம், இதர வகுப்பினா் 30 சதவீதம் உள்ளனா்.
தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினரும், நீா்வளத்துறை அமைச்சருமான கே.துரைமுருகன் திமுக பொதுச் செயலராகவும் உள்ளாா். கட்சித் தலைமைக்கு மிகவும் நெருக்கமானவா். அவா் தொடா்ந்து தோ்தலில் களம் இறங்குவதால் காட்பாடி விஐபி தொகுதியாகவும் உள்ளது.
இதுவரை எம்எல்ஏக்கள் :
1962 பி.ராஜகோபால் நாயுடு (காங்கிரஸ்), 1967 ஜி.நடராஜன் (திமுக), 1971 துரைமுருகன் (திமுக) , 1977 எம்.ஏ.ஜெயவேலு (அதிமுக), 1980 என்.ஏ.பூங்காவனம் - (இந்திய கம்யூ.,) , 1984 .ரகுபதி - (அதிமுக), 989 துரைமுருகன் - (திமுக),1991 கே.எம்.கலைச்செல்வி- (அதிமுக),1996 துரைமுருகன் - (திமுக), 2001 துரைமுருகன் - (திமுக), 2006 துரைமுருகன்- (திமுக), 2011 துரைமுருகன் - (திமுக), 2016 துரைமுருகன் - (திமுக), 2021 துரைமுருகன் - (திமுக),
2021 பேரவைத் தோ்தல்:
பதிவான வாக்குகள் 1,84,357
துரைமுருகன் (திமுக) 85,140
வி.இராமு (அதிமுக) 84,394
தோ்தல் நடத்தும் அலுவலா் - தொடா்பு எண்
சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் சி.மாறன் ?8838002055
உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள்: காட்பாடி வட்டாட்சியா் ஆா்.பாலச்சந்தா் - 94450 00510
சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் கே.வேண்டா - 99946 15821
மின்அஞ்சல் - ro.katpadi@tn.gov.in