புதுதில்லி

ஆதார் பதிவில் நெறிமுறைகள் கடைப்பிடிப்பு:  மத்திய அரசு தகவல்

DIN

ஆதார் அட்டைப் பதிவில் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்று மக்களவையில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.
இது தொடர்பாக நீலகிரி மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் சி.கோபாலகிருஷ்ணன்,  "தேவையான முகவரி, அடையாளச் சான்று இல்லாமல் ஆதார் அட்டை கள் அளிப்பது தொடர்பாக அதிக அளவில் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதா?' என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு  மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம்  மக்களவையில் புதன்கிழமை எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:  
தேவையான முகவரி, அடையாளச் சான்று இல்லாமல் ஆதார் அட்டை கள் அளிப்பது தொடர்பாக  புகார்கள் ஏதும் இல்லை.  ஆதார் பதவில் உரிய வழிகாட்டு நெறிமுறைகளும், நடைமுறைகளும் பின்பற்றப்பட்டு வருகின்றன.  இந்த விஷயங்கள், "ஆதார் பதிவு மற்றும் மேம்படுத்துதல் ஒழுங்குமுறைகள் 2016'-இல் உள்ள பிரிவு இரண்டிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆதார் சட்டத்தின் உரிய ஷரத்துகளின்படி சரி செய்யும் நடவடிக்கைகளும் தேவைப்படும் போது எடுக்கப்பட்டு வருகிறது என்று அதில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT