முகப்பு
புதுதில்லி

மங்கோல்புரி  தொழிற்பேட்டையில்  தீ விபத்து

மங்கோல்புரி, தொழிற்பேட்டையில் உள்ள ஷூ தொழிற்சாலையில் திங்கள்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:14 PM
பகிர்:

மங்கோல்புரி, தொழிற்பேட்டையில் உள்ள ஷூ தொழிற்சாலையில் திங்கள்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறை கட்டுப்பாட்டு அறை அதிகாரி கூறுகையில், "மங்கோல்புரி தொழிற்பேட்டையில் உள்ள காலணிகள் தயாரிப்புத் தொழிற்சாலையில் தீ விபத்து குறித்து காலை10.35 மணிக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, தீயை அணைக்கும் பணிக்கு 21 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டன. 4 மணி போராட்டத்துக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 
இதுபோல, நரேலா பகுதியில் உள்ள ஷு தயாரிப்பு ஆலையில் தீ விபத்து நேரிட்டதாக காலை 9.10 மணிக்கு தகவல் கிடைத்தது. 
இதைத் தொடர்ந்து, தீ விபத்து நேரிட்ட பகுதிக்கு தலா 14 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. 3 மணி நேரம் போராட்டத்துக்கு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து தெரியவில்லை. இந்த இரு தீ விபத்துகளில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை' என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →