முகப்பு
புதுதில்லி

சுங்கச்சாவடிகளில் வாகன  நெரிசலைத் தடுக்கக் கோரி மனு

தில்லி எல்லைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் தினந்தோறும் ஏற்படும் வாகன நெரிசலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:14 PM
பகிர்:

தில்லி எல்லைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் தினந்தோறும் ஏற்படும் வாகன நெரிசலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்குரைஞர் அமித் சாஹினி என்பவர் தாக்கல் செய்திருக்கும் மனுவில், "தில்லி எல்லைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்களிடம் வசூலிக்கப்படும் சுங்கத் தொகையின்போது, தவறான மேலாண்மை வழிகள் கையாளப்படுகிறது. இதனால், வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நீண்ட தூரம் நிற்க வேண்டியுள்ளது. இதனால் நேரமும், பெட்ரோல், டீசலும் வீணாவதுடன் காற்று, ஒலி மாசுவும் ஏற்படுகிறது.
சுங்கக் கட்டணம் வசூலிப்பவர்களுக்கு தெரிந்தே இந்த வாகன நெரிசல் ஏற்படுவதால், நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு வர்த்தக வாகனங்களிடம் மட்டும் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட வேண்டும். தில்லியின் எல்லைகளில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளில் வாகன நெரிசல் ஏற்படுவதைத் தடுக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கும், தில்லி அரசுக்கும் உத்தரவிட வேண்டும் என்று இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →