எல்லையில் பாக். அத்துமீறித் தாக்குதல்
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், உரி பகுதியில் உள்ள பாதுகாப்புச் சாவடிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் வியாழக்கிழமை அத்துமீறித் தாக்குதல் நடத்தினர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், உரி பகுதியில் உள்ள பாதுகாப்புச் சாவடிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் வியாழக்கிழமை அத்துமீறித் தாக்குதல் நடத்தினர்.
இதுகுறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பாரமுல்லா மாவட்டம், உரி பகுதியில் உள்ள பாதுகாப்புச் சாவடிகளில் வியாழக்கிழமை காலை பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். அவர்களுக்கு உடனடியாக நமது ராணுவத்தினர் உரிய பதிலடி கொடுத்தனர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லைப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர் சுனில் குமார் முர்மு (28) சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார்.