முகப்பு
புதுதில்லி

தில்லி காங்கிரஸ் சார்பில் கொண்டாட்டம்

வசந்த காலத்தை வரவேற்கும் ஹோலிப் பண்டிகையிலாவது பாஜக, ஆம் ஆத்மி கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் நல்ல புத்தியை வழங்க இறைவனை

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

வசந்த காலத்தை வரவேற்கும் ஹோலிப் பண்டிகையிலாவது பாஜக, ஆம் ஆத்மி கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் நல்ல புத்தியை வழங்க இறைவனை தில்லிவாழ் மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தில்லி  தலைவர் அஜய் மாக்கன்  தெரிவித்தார். 
 தில்லி காங்கிரஸ் உத்தராஞ்சல் பிரிவின் சார்பில்  தில்லியில் உள்ள மாநிலக் கட்சி அலுவலகத்தில் ஹோலிப் பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. 
 இக்கொண்டாட்டத்தில் பூர்வாஞ்சல் பிரிவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மகாபல் மிஸ்ரா, சிவாஜி சிங், பி.கே.மிஸ்ரா உள்படப் பலரும் கலந்து கொண்டனர்.
 இந்த நிகழ்வில்  கட்சியின் தில்லி தலைவர் அஜய் மாக்கன் பேசியதாவது: தில்லியை ஆளும் ஆம் ஆத்மி, மத்தியில் ஆளும் பாஜக அரசுகளின் நிர்வாகக் குளறுபடிகளாலும் அவர்கள் கடைப்பிடிக்கும் மோதல் போக்காலும் தில்லி மக்கள்  கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.  வசந்த காலத்தை வரவேற்கும் ஹோலிப் பண்டிகையைக் கூட மன நிறைவுடன் அவர்களால் கொண்டாட முடியவில்லை.  ஆம் ஆத்மி அரசுக்கும் பாஜகவுக்கும் நடைபெறும் ஈகோ யுத்தம் மக்களை சலிப்படைய வைத்துள்ளது.   சீலிங் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள வணிகர்களால் எவ்வாறு மனநிறைவுடன் ஹோலிப் பண்டிகையைக் கொண்டாட முடியும்? இந்தப் பண்டிகை நாளில் மத்தியில் உள்ள பாஜக அரசுக்கும், தில்லியில் உள்ள ஆம் ஆத்மி அரசுக்கும் நல்ல புத்தியை இறைவன் வழங்க வேண்டும் என நாம்அனைவரும் பிரார்திக்க வேண்டும் என்றார் அவர். 
 

முழு கட்டுரையைப் படிக்க →