முகப்பு
புதுதில்லி

மயூர் விஹார் விநாயகர் கோயிலில் ரிக்வேத ஸம்ஹிதா ஹோமம்

தில்லி மயூர் விஹார் ஃபேஸ் 3-இல் உள்ள ஸ்ரீஇஷ்ட சித்தி விநாயகர் கோயிலில் ஸ்ரீப்ரசன்ன மஹா கணபதி வேத சம்ரஷ்ண சபாவும்,

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

தில்லி மயூர் விஹார் ஃபேஸ் 3-இல் உள்ள ஸ்ரீஇஷ்ட சித்தி விநாயகர் கோயிலில் ஸ்ரீப்ரசன்ன மஹா கணபதி வேத சம்ரஷ்ண சபாவும், ஸ்ரீ ஆதி சங்கர சேவா சமாஜமும் இணைந்து உலக நன்மைக்காகவும், பக்தர்களின் உடல் நலத்திற்காகவும் ரிக்வேத ஸம்ஹிதா ஹோமத்தை நடத்தின. பிப்ரவரி 18-ஆம் தேதி முதல் பிப்ரவரி 27-ஆம் தேதி வரை இந்த ஹோமம் நடைபெற்றது.
இதையொட்டி, தினமும் காலை 7 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை நீலகண்ட சாஸ்திரிகள் வழிகாட்டுதலிலும், உதனேஸ்வர பட் கனபாடிகள், ராமச்சந்திர கனபாடிகள், பிரசன்ன கனபாடிகள், மணிகண்ட கனபாடிகள், வெங்கடாசலம் ஆகியோர் ரிக்வேத ஸம்ஹிதா ஹோமத்தை நடத்தினர். 
மாலை 3 மணிக்கு சந்திரமௌலி எனும் வித்யார்த்தி ஸமார்த்த நிகழ்ச்சியில் முதல் முறையாக சம்பூர்ண ரிக்வேத ஸம்ஹிதா கண்டஸ்த பாராயணம் நடைபெற்றது. மாலை 7 மணிக்கு ரிக்வேத உபன்யாஸம் நடைபெற்றது.
கடைசி நாளான பிப்ரவரி 27-ஆம் தேதி ஹோமம் முடிவுற்று, பூர்ணாஹுதி, விநாயகருக்கு கலச அபிஷேகம் நடைபெற்றது. நிறைவில் ப்ரசன்ன மஹா கணபதி வேத சம்ரஷ்ண சபா அறங்காவலர் ராஜேஷ் கனபாடிகள் நன்றி கூறினார். 
ஹோமத்தில் பங்கேற்ற வேத பண்டிதர்கள் ஸ்ரீஆதி சங்கர சேவா சமாஜத்தின் சார்பில் கௌரவிக்கப்பட்டனர். 

முழு கட்டுரையைப் படிக்க →