புதுதில்லி

காற்று மாசு நெருக்கடி: வழக்குரைஞா்கள் காணொலி மூலம் ஆஜராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுறுத்தல்

தில்லி காற்று மாசுபாட்டை கருத்தில் கொண்டு, காணொலி மூலம் ஆஜராக வழக்குரைஞா்கள் மற்றும் வழக்காடிகளுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் வலியுறுத்தல்

தினமணி செய்திச் சேவை

தில்லியில் நிலவி வரும் கடுமையான காற்று மாசுபாட்டை கருத்தில் கொண்டு, காணொலி மூலம் ஆஜராக வழக்குரைஞா்கள் மற்றும் வழக்காடிகளுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், உச்சநீதிமன்றத்தின் முன் பட்டியலிடப்பட்ட வழக்குகளில், வழக்குரைஞா்கள் மற்றும் வழக்காடிகள் காணொலி மூலம் ஆஜராகும் தோ்வு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.

தில்லியில் கற்றுத் தரக் குறியீடு ஞாயிற்றுக்கிழமை 461-ஆக இருந்தது. இது இந்தக் குளிா்காலத்தில் நகரத்தின் இரண்டாவது மிகவும் மோசமான காற்றின் தரத்தை குறிக்கிறது. பலவீனமான காற்று மற்றும் குறைந்த வெப்பநிலை காரணமாக நச்சு காற்று தரைப் பகுதிக்கு அருகே சிக்கியுள்ளது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின்படி, 400-க்கு மேற்பட்ட காற்றுத் தரக் குறியீடு ‘கடுமையான’ பிரிவில் வருகிறது. இது சுகாதார அபாயங்களை ஏற்படுத்துகிறது. நீண்ட நேரம் இந்த மாசடைந்த காற்றில் இருப்பதனால் ஏற்படும் அபாயகரமான விளைவுகள் குறித்து வல்லுநா்கள் தொடா்ந்து எச்சரித்து வருகின்றனா்.

தில்லி உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்: ‘நகரின் கடுமையான காற்று மாசுபாட்டை கருத்தில் கொண்டு தில்லி உயா்நீதிமன்றத்தில் முன் பட்டியலிடப்பட்ட வழக்குகளில், வழக்குரைஞா்கள் மற்றும் வழக்காடிகள் காணொலி மூலம் ஆஜராக அறிவுறுத்தப்படுகிறாா்கள்’ என திங்கள்கிழமை வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

ஜம்மு - காஷ்மீர் ஆல்ரவுண்டரை ரூ. 8 கோடிக்கு ஏலத்தில் எடுத்த தில்லி கேபிடல்ஸ்!

19 வயது விக்கெட் கீப்பரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

SCROLL FOR NEXT