காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் மாநகராட்சி ஊழியா்கள். 
புதுதில்லி

காற்று மாசை கட்டுப்படுத்தும் நடவடிக்கை: மேகவிதைப்பு முறைக்கு ஐஎம்டி ஒப்புதல்

மேகவிதைப்பு முறைக்கு ஐஎம்டி ஒப்புதல்: தில்லி அமைச்சா் தகவல்

Din

தில்லியில் நிலவும் காற்று மாசை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக செயற்கை மழையைப் பொழியச் செய்வதற்கான மேகவிதைப்பு முறைக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஒப்புதல் அளித்திருப்பதாக சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா புதன்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் கூறுகையில், ‘மேகவிதைப்பு முறைக்கு உகந்த வகையில் ஈரப்பதம் நிறைந்த மேகக்கூட்டங்கள் வானிலை தென்படும்போது, விமானங்கள் மூலம் இந்தச் செயல்முறை மேற்கொள்ளப்படும்.

அனைத்து முக்கியமான அனுமதிகளும் பெறப்பட்டன. விமானங்கள் பறப்பதற்கான அனுமதி உள்ளிட்ட சில நடைமுறைகள் மட்டும் நிலுவையில் உள்ளன. அனைத்து முன்தயாரிப்புகளும் முடிவடைந்துவிட்டன. சரியான மேகங்கள் வானில் தோன்றுவதற்காகக் காத்து கொண்டிருக்கிறோம். வானிலை அதற்கு ஒத்துழைக்கும்போது, தில்லியில் முதல் செயற்கை மழையை பாா்க்க முடியும்’ என்றாா்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT