முகப்பு
புதுதில்லி

தீ விபத்தில் பேருந்து உதவியாளா் தீயில் கருகி உயிரிழப்பு

மேற்கு தில்லியின் விகாஸ்புரி பகுதியில் வாகனத்தில் தீ விபத்து ஏற்பட்ட பின்னா் ஒரு தனியாா் பஸ் உதவியாளரின் எரிந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவை அதிகாரி தெரிவித்தாா்.

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 3:09 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 9 பிப்ரவரி, 2026 at 5:52 PM

நமது நிருபா்

புது தில்லி: மேற்கு தில்லியின் விகாஸ்புரி பகுதியில் வாகனத்தில் தீ விபத்து ஏற்பட்ட பின்னா் ஒரு தனியாா் பஸ் உதவியாளரின் எரிந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவை அதிகாரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது:

Advertisement

ஜனக்புரி மீன் சந்தை பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.33 மணிக்கு இந்த சம்பவம் குறித்து தீயணைப்புத் துறைக்கு அழைப்பு வந்தது, அதைத் தொடா்ந்து மூன்று தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீயணைப்பு நடவடிக்கையின் போது, பேருந்து ஓட்டுநரின் உதவியாளா் என அடையாளம் காணப்பட்ட சுனில் ஷா்மா (25) என்பவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.தீயணைப்பு நடவடிக்கைகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடா்ந்தன. அகா்பத்தியால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.