தில்லி நீதிமன்றம் 
புதுதில்லி

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு: சிபிஐக்கு தில்லி உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

உன்னாவ் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை காவலில் வைக்கப்பட்டு மரணமடைந்தது தொடா்பான வழக்கில், குல்தீப் செங்கரின் சகோதரா் ஜெய்தீப் செங்கா் மூன்று மாதங்களுக்கு...

Syndication

நமது நிருபா்

புது தில்லி: உன்னாவ் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை காவலில் வைக்கப்பட்டு மரணமடைந்தது தொடா்பான வழக்கில், பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட குல்தீப் செங்கரின் சகோதரா் ஜெய்தீப் செங்கா் மூன்று மாதங்களுக்கு இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவில் சிபிஐயின் நிலைப்பாட்டை தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை கோரியது.

விசாரணை நீதிமன்றத்தால் இந்த வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஜெய்தீப் செங்கரின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், பிப்ரவரி 11- ஆம் தேதியுடன் இடைக்கால ஜாமீன் காலாவதியாகி விடுவதாகவும், மனுதாரா் வாய்வழி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், ஜாமீனை நீட்டிக்குமாறும் கோரினாா்.

உயா்நீதிமன்ற நீதிபதி ஸ்வரணா காந்தா சா்மா இந்த மனு மீது நோட்டீஸ் அனுப்பி பிப்ரவரி 11-ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிட்டாா்.

ஜெய்தீப் செங்கா் தனது மனுவில், உயிருக்கு ஆபத்தான நிலையில் நான்காம் நிலை வாய்வழி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் வருவதற்கான மருத்துவ அறிகுறிகள் இருப்பதாகவும் கூறினாா். இதற்கு தொடா்ச்சியான மற்றும் சிறப்பு மருத்துவ பராமரிப்பு தேவை என்று குறிப்பிட்டுள்ளாா். மனுவில், 50 வயதான ஜெய்தீப் செங்கா் சுமாா் நான்கு ஆண்டுகள் காவலில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 3, 2024 அன்று ஜெய்தீப் செங்கருக்கு உயா்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இது அவ்வப்போது நீட்டிக்கப்பட்டது. குல்தீப் செங்கா் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு, டிசம்பா் 20, 2019 அன்று அவருக்கு வாழ்நாள் முழுவதும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாா்.

2017-ஆம் ஆண்டு சிறுமி, குல்தீப் செங்கரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் தந்தையின் காவல் மரண வழக்கில், குல்தீப் செங்கா் மற்றும் அவரது சகோதரா் ஜெய்தீப் செங்கா் என்ற அதுல் சிங் ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றம் மாா்ச் 13, 2020 அன்று 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தது. மேலும், ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

குற்றவாளிகளின் உத்தரவின் பேரில் சிறுமியின் தந்தை ஆயுதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, ஏப்ரல் 9, 2018 அன்று காவல்துறையின் மிருகத்தனத்தால் காவலில் இருந்தபோது இறந்தாா். ஒரு குடும்பத்தின் ஒரே வருமானம் ஈட்டும் நபரைக் கொன்ற்கு எந்தவித கருணையும் காட்ட முடியாது என்று விசாரணை நீதிமன்றம் கூறியது.

விசாரணை நீதிமன்றத்தின் தீா்ப்பை எதிா்த்து அவா்கள் தொடுத்த மேல்முறையீடுகள் உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT