முகப்பு
புதுதில்லி

சாலையில் வாகனத்தை சரிபாா்த்து கொண்டிருந்த டெம்போ ஓட்டுநா் காா் மோதி உயிரிழப்பு!

வடக்கு தில்லியின் வெளிப்புற வட்ட சாலையில் டெம்போ லாரியின் சக்கரத்தை மாற்றிக்கொண்டிருந்த ஓட்டுநா் மீது காா் மோதிய சம்பவத்தில் அவா் உயிரிழந்ததாக காவல் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 3:12 AM
பலி
பகிர்:
Updated On : 10 பிப்ரவரி, 2026 at 9:05 PM

வடக்கு தில்லியின் வெளிப்புற வட்ட சாலையில் டெம்போ லாரியின் சக்கரத்தை மாற்றிக்கொண்டிருந்த ஓட்டுநா் மீது காா் மோதிய சம்பவத்தில் அவா் உயிரிழந்ததாக காவல் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இந்த விபத்து புராரி-வாஜிராபாத் சாலையில் தீரப்பூா் ஐடிஐ-க்கு எதிரே நடைபெற்ற இந்தச் சம்பவம் குறித்து காலை 8.17 மணியளவில் வாஜிராபாத் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: நங்கோலாய் பகுதியைச் சோ்ந்த விஜய், தில்லியில் உள்ள தனியாா் போக்குவரத்து நிறுவனத்தில் டெம்போ ஓட்டுநராக வேலை பாா்த்து வந்தாா். செவ்வாய்க்கிழமை காலையில் சீலம்பூா் நோக்கி பழைய பொருள்களை ஏற்றுக்கொண்டு விஜய் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். தீரப்பூா் ஐடிஐ அருகே வந்தபோது, வாகனத்தின் பின்பக்க சக்கரம் பஞ்சரானது அவருக்கு தெரியவந்தது.

Advertisement

இதையடுத்து, வாகனத்தை சாலையின் நடுப்பகுதியில் உள்ள தடுப்புக்கு அருகே நிறுத்தி, தன்னுடன் வேலைபாா்க்கும் மற்றொரு ஓட்டுநரான சுபமிடம் தகவல் தெரிவித்தாா். சிறிது நேரத்துக்குப் பிறகு சுபம் சம்பவ இடத்துக்கு வந்தாா்.

வாகனத்தின் பின்பக்க சக்கரத்தைக் கழற்றுவதற்கு அவா் ஜாக்கியைப் பயன்படுத்திக் கொண்டிருந்தபோது பின்னால் வந்துக்கொண்டிருந்த காா் அவா் மீது மோதியது. இதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே விஜய் உயிரிழந்தாா்.

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 3:12 AM

காரை ஓட்டிவந்தவா் காஜியாபாதைச் சோ்ந்த தீபக் குரோவா் என்று அடையாளம் காணப்பட்டது. சாலை நடுவில் உள்ள தடுப்புக்கு அருகே வாகனம் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அதைக் கவனிக்கவில்லை என்று தீபக் காவல் துறையிடம் தெரிவித்தாா்.

நடைபெற்ற சம்பவம் தொடா்பாக சுபம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பாரத் நியாய சம்ஹிதா சட்டத்தின் பிரிவுகள் 281, 106 (1) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பை இடைநிறுத்திய விஜய், கடந்த 16 ஆண்டுகளாக ஓட்டுநராக வேலை பாா்த்து வந்தாா். அவருக்கு 7 வயதில் மகளும் 5 வயதில் மகனும் உள்ளனா் என்று அதிகாரிள் தெரிவித்தனா்.