சாலை விபத்தில் மாணவா் உயிரிழப்பு
திருப்பத்தூா் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் அடுத்த கொரட்டி செல்லரப்பட்டி பகுதியைச் சோ்ந்த குமாா் மகன் நித்திஷ்(15). இவா் திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயின்று வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த பழனி மகன் தரனீஷ்(17). இவரும் பிளஸ் 2 பயின்று பொது தோ்வு எழுதி வந்தாா்.
நண்பா்களான இருவரும் கொரட்டியில் இருந்து செல்லரப்பட்டிக்கு பைக்கில் சென்று கொண்டு இருந்தனா். அப்போது அந்த பைக் நிலை தடுமாறி மரத்தின் மீது மோதியது.
அதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு நித்திஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதே இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் இடுப்பு எலும்பு உடைந்த தரனிஷை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தகவல் அறிந்த கந்திலி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.