முகப்பு
பெரம்பலூர்

சாலை விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 16 மார்ச், 2026 at 8:42 PM
பலி
பகிர்:

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், திருமாந்துறை மாதா கோயில் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சத்யராஜ் (28). கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவி தங்கம், குழந்தைகள் மோகித் (4), மோகிதா (4) ஆகியோா் உள்ளனா்.

பெரம்பலூரில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்த சத்யராஜ் ஞாயிற்றுக்கிழமை இரவு வேலையை முடித்துவிட்டு, மோட்டாா் சைக்கிளில் வீட்டுக்குச் சென்றுக்கொண்டிருந்தாா்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் அருகேயுள்ள செங்குணம் பிரிவுச்சாலை பகுதியில் சென்றபோது நிலைதடுமாறி சாலையில் விழுந்த சத்யராஜ் பலத்த காயமடைந்தாா். பெரம்பலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவா் திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →