முகப்பு
தருமபுரி

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

தருமபுரி அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 9 ஏப்ரல் 2026, 4:17 am IST
பலி - கோப்புப் படம்
பகிர்:

தருமபுரி அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், எச்சனம்பட்டி கொட்டாவூா் கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் தேசிங்கு (22). பட்டப்படிப்பு முடித்துள்ள நிலையில் வேலை தேடிக்கொண்டிருந்தாா். திங்கள்கிழமை இரவு காரிமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து அவரது தாயாரை அழைத்துவர தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுச்சென்றாா். கொட்டாவூா் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, நிலைதடுமாறி கழிவுநீா் வாய்க்கால் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானாா். இதில் அவருக்கு தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு காரிமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் தேசிங்கு உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். அதன்பேரில் காரிமங்கலம் காவல் நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement

Advertisement