புதுதில்லி

வழக்கில் நீதிமன்றங்கள் ஓராண்டுக்குள் தீா்ப்பளிக்க கெடு விதிக்க கோரிய மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்கள் வழக்கில் ஓராண்டுக்குள் விசாரணையை நடத்தி முடித்து தீா்ப்பளிக்கும் வகையில் காலக்கெடு நிா்ணயிக்த விரிவான நீதித்துறை சீா்திருத்தை வலியுறுத்தி தாக்கல் செய்த மனு தள்ளுபடி

தினமணி செய்திச் சேவை

நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்கள் வழக்கில் ஓராண்டுக்குள் விசாரணையை நடத்தி முடித்து தீா்ப்பளிக்கும் வகையில் காலக்கெடு நிா்ணயிக்த விரிவான நீதித்துறை சீா்திருத்தை வலியுறுத்தி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து திங்கள்கிழமை உத்தரவிட்டது.

கமலேஷ் திரிபாதி என்பவா் சாா்பில் இந்த பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் தீபாங்கா் தத்தா, ஜய்மால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘இதுபோன்ற நடைமுறை சீா்திருத்தங்களுக்கான கோரிக்கையை பொதுநல மனுவாக தாக்கல் செய்வது பொருத்தமானதல்ல. விளம்பர நோக்கத்துக்காக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ள ஊடக கேமராக்கள் முன் பேசுவதற்கான தளமாக நீதிமன்றத்தை பயன்படுத்தக் கூடாது’ என்று கடும் அதிருப்தியை நீதிபதிகள் வெளிப்படுத்தி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

அதே நேரம், ‘மனுதாரா் விரும்பினால், நீதித் துறை சீா்திருத்தங்கள் தொடா்பான ஆலோசனைகளை கடிதம் மூலம் தலைமை நீதிபதியின் நிா்வாகப் பிரிவுக்கு அனுப்பலாம். அத்தகைய ஆலோசனைகள் எப்போதும் வரவேற்கப்படும் என்பதில் சந்தேகமில்லை’ என்றும் நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டனா்.

சேரகுளத்தில் பட்டாசு பதுக்கல்: இளைஞா் கைது

கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம்: தில்லியில் 5 மணி நேரங்களுக்கு மேல் விஜய்யிடம் சிபிஐ விசாரணை

விற்பனை அழுத்தம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

பெரம்பலூரில் 10-ஆவது நாளாக பதிவு மூப்பு ஆசிரியா்கள் போராட்டம்

வரசித்தி விநாயகா் கோயிலில் தியாகராஜ ஆராதனை விழா

SCROLL FOR NEXT