புதுதில்லி

இசைப் பள்ளி ஆண்டு விழா

DIN

முனிர்காவில் உள்ள கே ஆர் ஜே இசைப் பள்ளியின் 24-ஆம் ஆண்டு விழா காமாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
ஜார்க்கண்ட் மாநில உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி எம். கற்பக விநாயகம் சிறப்புரையாற்றினார். தில்லி தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவர் கே. வி. கே. பெருமாள் வாழ்த்திப் பேசினார். கர்நாடக இசைக் கலைஞர் ராதா வெங்கடாசலம், மிருதங்க வித்வான் ஏ. பிரேம் குமார் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
இளம் கலைஞர்களுக்கு தில்லி தமிழ்ச் சங்கத்தின் தலைவர் இந்துபாலா பொன்னாடை அணிவித்தார். காமாட்சி அம்மன் கோயில் நிர்வாகி பொள்ளாச்சி கணேசன், ஹயக்ரீவா அமைப்பின் தலைவர் குருசரண், சமூக சேவகி மீனா வெங்கி ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளியின் முதல்வர் உமா கணேசன் வரவேற்றார். பள்ளியின் நிறுவனர் நிர்மலா பாஸ்கரன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை செயலாளர் சுந்தர் ராவ், இணைச் செயலாளர்கள் எஸ்.பி. முத்துவேல், ஜெயக்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரத்னம் வசூல் எவ்வளவு?

SCROLL FOR NEXT