புதுதில்லி

காவிரி டெல்டாவை வேளாண் மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்: தில்லியில் ஜி.கே. வாசன் பேட்டி

DIN

காவிரி டெல்டா பகுதிகளை வேளாண் மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளபடி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இது குறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியதாவது: 
காவரி டெல்டா மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் தெரிவித்துள்ளபடி காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீர் திறக்கப்படும் என்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்றும் விவசாயிகள் நம்பிக்கையுடன் உள்ளனர். இந்த நம்பிக்கையை கர்நாடக அரசும், மத்திய அரசும் சோதிக்கக் கூடாது. தேர்தல் அரசியலுக்காக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் காலம் தாழ்த்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. 
காவிரி விவகாரத்தில் கூட்டாட்சி தத்துவம், மனிதநேயம், சட்ட விதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் மத்திய அரசின் கண்ணோட்டம் அமைய வேண்டும். தமிழக விவசாயிகள் என குறுகிய கண்ணோட்டத்துடன் பார்க்காமல், இந்திய விவசாயிகள் என்ற கண்ணோட்டம் வேண்டும். காவிரி விவகாரத்தில் மத்திய அரசு நடுநிலையுடன் செயல்பட வேண்டும். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மார்ச் 15-ஆம் தேதி தொடங்கவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலும் உரிய தீர்மானத்தை இயற்ற வேண்டும். இயற்றப்பட்ட அந்த தீர்மானத்தை அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் சென்று பிரதமரிடம் அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
 காவிரி மேலாண்மை வாரியத்தை உரிய காலத்தில் மத்திய அரசு அமைக்கத் தவறும் பட்சத்தில் தமிழகத்தின் சட்டப்பேரவை உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகும் சூழல் நேரிடும். 
தமிழகத்தில் எதிர்காலத்தில் தனிக் கட்சி ஆட்சி அமைக்கும் சாத்தியமில்லை. தமிழகத்திலும், தேதிய அரசியலும் கூட்டணி அரசியலுக்கு வாய்ப்பு உள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களுக்கு இடம் அளிக்கக் கூடாது. காவிரி டெல்டா மாவட்டங்களை வேளாண் மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்' என்றார் ஜி.கே. வாசன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT