முகப்பு
புதுதில்லி

ஆயுதம் தயாரித்து விநியோகம்: தில்லியில் 2 பேர் கைது

சட்டவிரோதமாக துப்பாக்கிகள் தயாரித்து, விநியோகத்தில் ஈடுபட்டு வந்த மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர், அவரது கூட்டாளி ஆகியோரை தில்லி போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 20

Updated On : 14 மே, 2018 at 11:51 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

சட்டவிரோதமாக துப்பாக்கிகள் தயாரித்து, விநியோகத்தில் ஈடுபட்டு வந்த மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர், அவரது கூட்டாளி ஆகியோரை தில்லி போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 20 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து தில்லி காவல் துறையின் குற்றப் பிரிவு உயர் அதிகாரி ராஜேஷ் தேவ் திங்கள்கிழமை கூறியதாவது:
ஆயுத விநியோகத்தில் ஈடுபட்ட மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த உகரா சிங் என்பவரை தில்லி குற்றப் பிரிவு போலீஸார் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கைது செய்தனர். அவர் அளித்த தகவலில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பச்சன் சிங் என்பவர் ஆயுத விநியோகம், தயாரிப்பில் முக்கிய மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து, அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இப்படையினர் மத்திய பிரதேச மாநிலம், செந்த்வா பகுதியில் முகாமிட்டு பச்சன் சிங்கைப் பிடிக்க நடவடிக்கை எடுத்து வந்தனர்.
இந்நிலையில், மே 10-ஆம் தேதி நள்ளிரவில் பல்வாடி காட்டுப் பகுதியில் பச்சன் சிங் கைது செய்யப்பட்டார். அவர் துப்பாக்கிகள் தயாரிப்பதில் மிகுந்த அனுபவம் பெற்றிருப்பது தெரிய வந்தது.
அவர் அளித்த தகவலின் பேரில், உத்தர பிரதேச மாநிலம், மீரட் பகுதியைச் சேர்ந்த அவரது கூட்டாளி நூர் முகம்மதை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். இவர் பச்சன் சிங்கிடமிருந்து 20 சட்டவிரோத துப்பாக்கிகளை வாங்கியிருப்பதும் தெரிய வந்தது. இவர்கள் தில்லி, என்சிஆர் பகுதியில் வசிக்கும் கிரிமினல்களுக்கு துப்பாக்கிகள் விநியோகம் செய்து வருவதும் தெரிய வந்தது. இருவரிடமிருந்தும் 20 துப்பாக்கிள் பறிமுதல் செய்பட்டதாக காவல் அதிகாரி ராஜேஷ் தேவ் தெரிவி|த்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.