தில்லியில் ரூ.30 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 4 பேர் கைது
தில்லியில் போதை மாத்திரைகளை வைத்திருந்ததாக நான்கு பேரை தில்லி காவல் துறையின் தனிப் பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.30 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்
தில்லியில் போதை மாத்திரைகளை வைத்திருந்ததாக நான்கு பேரை தில்லி காவல் துறையின் தனிப் பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.30 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து தில்லி காவல் துறையின் தனிப் பிரிவு உயர்அதிகாரி திங்கள்கிழமை கூறியதாவது:
தில்லியில் போதைப் பொருள் விநியோகத்தில் ஈடுபடும் சர்வதேச போதைப் பொருள் கும்பலுடன் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.30 கோடி மதிப்புள்ள 6 லட்சத்து 50 ஆயிரம் மஃபட்ரான், மெத்தாகுவாலோன் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.