புதுதில்லி

தில்லியில் வெயிலின் தாக்கம் நீடிப்பு

DIN

தலைநகர் தில்லியில் சனிக்கிழமை 45 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்தியது. இது நிகழ் கோடைப் பருவத்தில் அதிகபட்ச அளவாகும்.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
தில்லியில் கடந்த சில தினங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகம் உள்ளது. சனிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸாக பதிவானது. இது, நிகழ் கோடை பருவத்தில் அதிகம் என்பதுடன், கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவாகும். கடந்த 2015 கோடை பருவத்தில் அதிகபட்சமாக 46 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. சனிக்கிழமை குறைந்த பட்ச வெப்பநிலை 24.5 டிகிரியாக பதிவானது.
அடுத்த இரு தினங்களுக்கு அனல் காற்று நீடிக்க வாய்ப்புள்ளது. இதனால், 45 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலேயே வெப்பநிலை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தில்லியில் வெள்ளிக்கிழமை பதிவான அதிகபட்ச, குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 43.6, 23.8 டிகிரி செல்சியஸ் ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

SCROLL FOR NEXT