புதுதில்லி

"பயிர் காப்பீட்டு திட்டத்தால் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்குதான் லாபம்'

DIN

இன்சூரன்ஸ் நிறுவனங்கள் லாபம் அடையும் வகையிலேயே, பயிர் காப்பீட்டு திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக சுட்டுரையில் அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள பதிவுகளில் தெரிவித்திருப்பதாவது:
2016-17ஆம் நிதியாண்டில் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தால், சுமார் ரூ.6,460 கோடி லாபம் கிடைத்துள்ளது. இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பயனடையும் வகையில், விவசாயிகளிடம் இருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து 2017-18ஆம் நிதியாண்டில் ரூ.8,000 கோடி முதல் ரூ.9,000 கோடி வரை லாபம் ஈட்டுவதற்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளன. இத்தகைய திட்டத்தில் இருந்து 84 லட்சம் விவசாயிகள் விலகினார்கள் என்பதில் ஆச்சரியம் உள்ளதா? அவர்களில் பெரும்பாலானோர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் விரைவில் அந்த மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் வாக்களிக்க இருக்கின்றனர் என்று அந்த பதிவுகளில் ப. சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT