புதுதில்லி

அரசு பொதுக் காப்பீட்டு நிறுவன முகவர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும், மூத்த முகவர்களுக்கு சலுகை விலையில் மருத்துவக் காப்பீடு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி நாடாளுமன்றச் சாலையில் அரசு பொதுக் காப்பீட்டு நிறுவன முகவர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய பொதுக் காப்பீட்டு முகவர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அரசு பொதுக் காப்பீட்டு நிறுவன முகவர்களும் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டம் தொடர்பாக அகில இந்திய பொதுக் காப்பீட்டு முகவர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் ஆர்.சுந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
அரசு பொதுக் காப்பீட்டு நிறுவனங்களில் சுமார் 12 லட்சம் முகவர்கள் வேலை செய்கின்றனர். இவர்கள் அனைவரும் முழு நேர முகவர்களாகவே செயல்பட்டு வருகின்றனர். 
இந்த நிறுவனங்களுக்கு பிரதான வருவாயை அதாவது சுமார் 70 சதவீதமான வருவாயை நாங்களே ஈட்டித் தருகிறோம். ஆனால், இந்த நிறுவனங்கள் சார்பில் எங்களுக்கு எவ்வித சலுகைகளும் தரப்படுவதில்லை. இந்த நிறுவனங்களின் ஊழியர்களுக்கு ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. 
ஆனால், அதே நிறுவனத்தின் முகவர்களான எங்களுக்கு எவ்வித சலுகைகளும் வழங்கப்படுவதில்லை. இந்த மாற்றாந்தாய் மனப்பான்மையைக் கண்டிக்கிறோம். முகவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். மூத்த முகவர்களுக்கு சலுகை விலையில் மருத்துவக் காப்பீடு வழங்கப்பட வேண்டும். 
ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை முகவர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளோம் என்றார்  அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு இடைக்கால ஜாமீன்!

ராகுலை விமர்சித்து விடியோ: ஜெ.பி.நட்டா மீது வழக்குப்பதிவு

காந்தாரி.. ஈஷா ரெப்பா!

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

SCROLL FOR NEXT