புதுதில்லி

இயற்கை - கட்டுமானங்கள் இடையே சமநிலை அவசியம்: இயற்பியல் வல்லுநர்கள் வலியுறுத்தல்

DIN

இயற்கை - கட்டுமானங்கள் இடையே சமநிலை அவசியம் என்று சுற்றுச் சூழலியலாளரும், இயற்பியல் வல்லுநருமான விக்ரம் சோனி வலியுறுத்தினார். மேலும், தரத்திற்குப் பதிலாக உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை கட்டுமானதாரர்கள் விற்றுக் கொண்டிருப்பதால், கட்டுமானச் செயல்பாடுகள் மற்றும் இயற்கை இடையேயான சமநிலை பராமரிக்கப்படாத நிலையில், அது ஒரு பேரழிவாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
தில்லியைச் சேர்ந்த "கிரேஹா' எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் சார்பில் "மீள்-கற்பனை தில்லியின் 100 ஆண்டுகள்' எனும் தலைப்பில் குழு விவாதம்அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழலியலாளர் விக்ரம் சோனி பங்கேற்றுப் பேசியதாவது:
தில்லி அல்லது குருகிராமில் இதர கட்டுமானதாரர்களும், கட்டடவியல் வல்லுநர்களும், அரசின் நவீன நகர நடவடிக்கைகளும் தரமான வாழ்க்கையை விற்றுக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் உங்களுக்கு வாழ்க்கையின் தரத்தை விற்றுக் கொண்டிருக்கின்றனர். 
வாழ்க்கையின் தரம் என்பது அதிகமான நுகர்வு, கூடுதல் சொகுசு ஆகியவைதான் அர்த்தமாகக் கொள்ளப்பட்டுள்ளது. இயற்கை, நகரம், கீழ்த்தட்டில் வாழும் மக்கள் ஆகியவை பற்றி மறந்துவிடுகிறது.
இளம் தலைமுறையினர் வாழ்க்கையின் தரத்தை உயர்ந்தோருக்கான விஷயமாகக் கருதுகின்றனர். உங்கள் உடல்நலம் என்பது உயர்ந்தோருக்கான விஷயம் அல்ல. நீங்கள் இறந்து கொண்டிருக்கிறீர்கள்! இயற்கை மற்றும் கட்டடங்கள் இடையே அல்லது இயற்கை பாரம்பரியம் மற்றும் கட்டப்பட்ட பாரம்பரியம் இடையே ஒரு சமநிலை இல்லாவிட்டால் உங்கள் நகரம் ஒரு பேரழிவாக இருக்கும். இந்தப் பாதிப்புக்காக நகர திட்டமிடுவோர், கட்டடவியலாளர்கள், அரசு ஆகியவை விமர்சனத்திற்கு உள்ளாகின்றனர் என்றார் அவர்.
 இந்த நிகழ்ச்சியில் "பூந்தோட்ட நகரத்தின் சவால்களும், நகரத்தின் கருத்துருவாக்கமும்' எனும் கருப்பொருளில் பொதுமக்கள் வாழ்க்கையில் நகர்மயமாதல் அதன் எதிர்மறையான விளைவுகள் தொடர்பான தலைப்புகளில் குழு விவாதம் நடைபெற்றது.
இதில் கிரேஹா அமைப்பின் தலைவரும், கட்டடவியல் வல்லுநருமான என்.என். ஆஷிஷ் கஞ்ச் பேசுகையில், "21-ஆவது நூற்றாண்டில் பொது சுகாதாரத்தில் இருந்து நகர்தல் மற்றும் போக்குவரத்துக்கு எப்படி முன்மாதிரி மாற்றம் ஏற்பட்டது என்பது குறித்து எடுத்துரைத்தார்.
அவர் கூறுகையில், "21-ஆவது நூற்றாண்டில் மிக சிக்கலான காரணிகளான திட்டமிடுவோர் மற்றும் கட்டவியலாளர்கள் நகர்தல் இயக்கத்தின் காலமாக இருக்கப் போவதாக குறிப்பிடிருந்தனர். போக்குவரத்து அதிமாக வலியுறுத்தப்பட்டது. 20-ஆம் நூற்றாண்டுக்கு முன்பு பார்த்தால் நூற்றாண்டுகளுக்கான நகரங்களை நாம் கொண்டிருந்தோம். எப்போதும் நகரங்கள் பொது சுகாதார கருத்தின் மீது முன்னூகிக்கப்பட்டுள்ளன. 
20-ஆம் நூற்றாண்டு இறுதிக்குள் முன்மாதிரி மாற்றத்தின் விளைவுகள் சாட்சியாக தெரிந்தன. பூமியானது சுற்றுச்சூழல் பேரழிவுக்கு இட்டுச் செல்லப்பட்டதும் தெளிவாகியது. மக்கள் நெருங்கி சேர்ந்து வாழ வரும் போது பொது சுகாதார பாதுகாப்பு மிக முக்கியமானதாகியது. 
பொது சுகாதாரத்தை நாம் பாதுகாக்க முடிந்திருக்காவிட்டால் நாம் வாழ்ந்து இருந்திருக்க மாட்டோம்' என்றார்.இந்த நிகழ்ச்சியில் கட்டடவியலாளர் மிது மாத்தூர், நகரத் திட்டமிடல் வல்லுநர் சந்திப் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT