புதுதில்லி

பிளாஸ்டிக்  தொழிற்சாலையில் தீ விபத்து

DIN

தில்லி சமய்ப்பூர் பாத்லி தொழிற்பேட்டையில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. 
இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்ததாவது: 
சமய்ப்பூர் பாத்லி தொழிற்பேட்டையில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் திங்கள்கிழமை காலை 7.20 மணிக்கு தீவிபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறைக்கு தகவல் வந்தது. 
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு உடனடியாக நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. 40 நிமிடங்களுக்குள் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாகத் தெரியவில்லை. இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார் அந்த அதிகாரி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: பிரதமர் மோடி, அமித் ஷா வெற்றி...

அயோத்தி: முன்னிலையில் சமாஜ்வாதி, தொடர் பின்னடைவில் பாஜக!

கங்கனா ரணாவத், அனுராக் தாக்குர்.. வெற்றி!

பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் வெற்றி!

தேர்தல் முடிவுகள்: யூனியன் பிரதேசங்களின் நிலை என்ன?

SCROLL FOR NEXT