புதுதில்லி

முத்தலாக் அவசரச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு

DIN

மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் இஸ்லாமிய நடைமுறைக்கு எதிராக மத்திய அரசு பிறப்பித்த அவசரச் சட்டத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
இதுதொடர்பாக கேரளத்தைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்பு ஒன்று சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் "மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் அவசரச் சட்டமானது, குறிப்பிட்ட மதத்தினரை அடையாளப்படுத்தி தண்டிக்கும் வகையில் அமைந்துள்ளது. இது சமூகத்தில் பிரிவினையையும், குழப்பத்தையும் ஏற்படுத்த வழிவகுக்கும். மேலும், மத உரிமைகளுக்கு எதிரானதாகவும் அமைந்துள்ளது. எனவே, அந்த அவசரச் சட்டத்தை செல்லாது என உத்தரவிட வேண்டும்' என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT