புதுதில்லி

மூத்த குடிமக்கள், மாணவர்களுக்கு பேருந்து, மெட்ரோ ரயில் "பாஸ்'

DIN

தில்லி போக்குவரத்து நிறுவன (டிடிசி) பேருந்துகளிலும், மெட்ரோ ரயில்களிலும் பயணம் மேற்கொள்ளும் மூத்த குடிமக்கள், மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு சிறப்பு சலுகைக் கட்டணத்தில் "பாஸ்' வழங்க வேண்டும் என்று பாஜகவின் மூத்த தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான விஜேந்தர் குப்தா வலியுறுத்தினார்.
இது தொடர்பாக தில்லியில் புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 2015 பேரவைத் தேர்தல் அறிக்கையில், ஆம் ஆத்மி கட்சி மூத்த குடிமக்கள், மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு பேருந்துகளிலும், மெட்ரோ ரயில்களிலும் சிறப்பு சலுகைக் கட்டணப் பாஸ் வழங்கப்படும் என்று வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த நான்கரை ஆண்டுகளில் இந்த வாக்குறுதியை தில்லி அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. எனவே, இந்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால், வரும் சட்டப்பேரவைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT