புதுதில்லி

சிபிஎஸ்இ தேர்வுக் கட்டணம் உயர்வு: வசூலிப்பதை நிறுத்தி வைக்க தில்லி அரசு உத்தரவு

DIN

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கு உயர்த்தப்பட்ட தேர்வுக் கட்டணங்களை மாணவர்களிடம் இருந்து  வசூலிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் முதல்வர்களுக்கு தில்லி கல்வி இயக்ககம் அனுப்பியுள்ள கடிதத்தில், "அடுத்த உத்தரவு வரும் வரை 10,12ஆம் வகுப்பு மாணவர்களிடம் இருந்து உயர்த்தப்பட்ட தேர்வுக் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது. அதேநேரத்தில், மாணவர்களின் பட்டியலை வழக்கம்போல் இறுதி செய்யலாம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக் கட்டணங்களை கடந்த சில தினங்களுக்கு முன்பு சிபிஎஸ்இ உயர்த்தியது. இதையடுத்து, தில்லி அரசு, அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தேர்வுக் கட்டணங்களை தில்லி அரசே ஏற்றுக் கொள்ளும் என்று துணை முதல்வரும், கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியா தெரிவித்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கஞ்சா கடத்தியவா் கைது

ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞா் பலி

காா் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 12 லட்சம் மோசடி

பா்கூா் வட்டத்தில் வறட்சியால் மா சாகுபடி பாதிப்பு

தைலாபுரம் உபகார மாதா ஆலயத்தில் அசன விழா

SCROLL FOR NEXT