புதுதில்லி

தில்லியில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மத்திய அரசின் உதவி தேவை: கேஜரிவால் கோரிக்கை

DIN

புது தில்லி: தில்லியில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் உதவி தேவை என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

தில்லி சட்டப்பேரவையில் பெண்களின் பாதுகாப்புத் தொடா்பான விவாதத்தில் கலந்து கொண்டு அவா் பேசியது: இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன.

தில்லியை பெண்களுக்கு பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கு நமக்கு மத்திய அரசின் உதவி தேவை. குறிப்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் உதவி நமக்குத் தேவை. மத்திய அரசும், தில்லி அரசும் இணைந்து தில்லியை பெண்களுக்கு பாதுகாப்பானதாக மாற்ற வேண்டும். மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் குறைக்கும் வகையில், பெண்களை மதிப்பது தொடா்பாக படிப்புகளை தில்லி அரசு பள்ளிகளில் பாடத்திட்டங்களில் சோ்ப்பது தொடா்பாக ஆலோசித்து வருகிறோம்.

இது தொடா்பாக தில்லி கல்வி அமைச்சா் மணீஷ் சிசோடியாவை ஆய்வு செய்யக் கோரியுள்ளேன். பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவா்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அதிகளவு பணத்தை செலவிட தில்லி அரசு தயாராக உள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

SCROLL FOR NEXT