புதுதில்லி

பாகிஸ்தான் மீது நடவடிக்கை: சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தல்

DIN

காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்துக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
பாகிஸ்தான் ஒரு நாடு அல்ல. அந்நாட்டில் பலுசிஸ்தான், சிந்து, பக்துனிஸ்தான், மேற்கு பஞ்சாப் என நான்கு மாகாணங்கள்உள்ளன. இவற்றை நான்கு நாடுகளாக பிரித்தால்தான் பாகிஸ்தானிடமிருந்து இந்தியாவுக்கு அமைதி கிடைக்கும். பயங்கரவாத பிரச்னை இருக்காது. பாகிஸ்தானை நான்காக பிரிப்பதற்கு அமெரிக்காவும், சீனாவும் ஒப்புக்கொள்ள வேண்டும். காஷ்மீரில் நடைபெற்ற தாக்குதல் உளவுத் துறையின் தோல்வியாகும்.
இந்த தாக்குதல் குறித்து உளவுத் துறை ஏற்கெனவே தகவல் அளித்துள்ளது. இது போன்ற தகவல்களை தினமும் உளவுத்துறை அளிப்பதால் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என நினைக்கிறேன். இத்தாக்குதலுக்கு அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருப்பது காரணமல்ல. இந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். "வர்த்தக கூட்டு நாடு' பாகிஸ்தான் எனும் அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தேன். வெள்ளிக்கிழமைதான் அந்த அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது. 
பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டு வரும் சிந்து நதியின் நீரின் அளவை குறைக்க வேண்டும். கர்த்தார்பூர் சாலைத் திட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும். பாகிஸ்தானுடன் எவ்வித உறவையும் வைத்துக் கொள்ளக்கூடாது. இதுவரை நடந்த 4 போரும் பாகிஸ்தான் தொடங்கியதாகும் என்றார்.
தமிழக அரசியல்: தமிழக அரசியல், பாஜக தேர்தல் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "தமிழகத்தில் பாஜக தனியாகப் போட்டியிட வேண்டும். இதை நான் தொடக்கத்திலிருந்து வலியுறுத்தி வருகிறேன். பாஜகவின் கொள்கைகளை மக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும். தேர்தலில் போட்டியிட்டு ஒன்று அல்லது இரண்டு முறை தோல்வியுற்றாலும் பரவாயில்லை என்பதையும் கூறி வருகிறேன். தேர்தல் கூட்டணி என்றால் சசிகலா -டிடிவி தினகரனுடன் சேர வேண்டும். பாஜக - அதிமுக கூட்டணி குறித்து என்னிடம் யாரும், எதுவும் தெரிவிக்கவில்லை என்றார் அவர்.

பயங்கரவாதிகளுக்கு தகுந்த பதிலடி
காஷ்மீரில் தாக்குதல் சம்பவம் ஒரு கோழைத்தனமானது என்று குறிப்பிட்ட தில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி, இந்தச் சம்பவத்தை நடத்திய பயங்கரவாதிகளுக்கு மத்திய அரசு தகுந்த பதிலடி தரும் என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
இந்தச் சம்பவத்தை கேள்விப்பட்டதும் அதிர்ச்சி அடைந்தேன். உயிரிழந்த வீரமிக்க வீரர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்களைத் தெரிவிக்கிறேன். இந்தத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுக்கு மத்திய அரசு தகுந்த பதிலடி அளிக்கும். அவர்களை அழிக்கும் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT