புதுதில்லி

"30 ஹோட்டல்களின் சுகாதார உரிமம் ரத்து'

DIN

கரோல் பாக் பகுதியில் 30 ஹோட்டல்களின் சுகாதார உரிமங்களை ரத்து செய்து வடக்கு தில்லி மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. அப்பகுதியில் உள்ள அர்பித் ஹோட்டலில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்ததையடுத்து, 71 ஹோட்டல்களின் தீப் பாதுகாப்பு உரிமங்களை ரத்து செய்து தில்லி அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
இந்நிலையில், வடக்கு தில்லி மேயர் ஆதேஷ் குப்தா செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
அர்பித் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து வடக்கு தில்லி மாநகராட்சி அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீப் பாதுகாப்பு உரிமங்கள் மீரப்பட்டதே இந்த விபத்துக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. 
இதனிடையே, கரோல் பாக் பகுதியில் 57 ஹோட்டல்களில் சுகாதார உரிமங்கள் மீறப்படுவதாக புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் சோதனை நடத்தி 30 ஹோட்டல்களின் சுகாதார உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT