புதுதில்லி

எரிசக்தி சேமிப்பு  பிரசாரம்: தில்லி மாணவர்கள் மூவர் உள்பட 6 பேருக்கு பரிசு

DIN

டாடா மின் விநியோக நிறுவனத்தின் (டிபிடிடிஎல்) தேசிய அளவிலான எரிசக்தி சேமிப்பு பிரசார இயக்கத்தில் பங்கேற்ற தில்லியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் உள்பட மொத்தம் 6 பேர் பரிசு பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இத்ததகவலை அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்
ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: எரிசக்தி சேமிப்பு தொடர்பாக "பிஜிலி பச்சோ ஸ்டார் பான்ஜோ' என்ற பிரசார இயக்கம் தொடங்கப்பட்டது. தேசிய அளவில் நடத்தப்பட்ட இந்தப் பிரசார இயக்கத்தில் 1,100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். 
எரிசக்தியை எவ்வாறு சேமிப்பது என்பது தொடர்பாக விடியோக்கள், கவிதைகள், ஸ்லோகன்கள், ஓவியங்கள் உள்பட பல்வேறு வடிவில் விளக்கப்பட்டது. இந்தப் பிரசார இயக்கம் டாடா பவர் நிறுவனத்தின் "கிளப் எனர்ஜி' திட்டம், ரெட் எஃப்எம் ரேடியோ மூலம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் பரிசுக்குரியவர்களாக தேசிய அளவில் 5 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதில் மும்பையைச் சேர்ந்த மாரிஸா கபாடியா, கொல்கத்தாவைச் சேர்ந்த சோஃபியா, தில்லியைச் சேர்ந்த ரம்யா கோஸ்வாமி, மனோவி கெளரி, தனிக்ஸா சர்மா மற்றும் பெங்களூருவை சேர்ந்த நிவேதிதா ஆகிய 6 பேர் தேர்வாகியுள்ளனர். இது தவிர 10 பேர் ஆறுதல் பரிசு பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

பூப்பூத்ததை யார் பார்த்தது?

அதிரடி... அதிதி ராவ் ஹைதரி...

ஐபிஎல் தொடரில் முதல் வீரர்... எம்.எஸ்.தோனியின் புதிய சாதனை!

காதலரைப் பிரிந்தாரா ஸ்ருதி ஹாசன்?

SCROLL FOR NEXT