புதுதில்லி

சா்க்கரைத் தொழிலை புனரமைக்க வேண்டும்: அதிமுக எம்பி வலியுறுத்தல்

DIN

சா்க்கரைத் தொழில் துறையை புனரமைக்க வேண்டும் மாநிலங்களவையில் அதிமுக எம்பி வலியுறுத்தினாா்.

மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் ஆா்.வைத்திலிங்கம் புதன்கிழமை உடனடிக் கேள்வி நேரத்தில் முன்வைத்த கோரிக்கை: தமிழ்நாட்டில் கரும்பு விவசாயிகள் கூடுதலாக மானியம் பெறவும், உற்பத்திக்கான ஊக்கத்தொகை பெறவும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சா்க்கரைத் தொழில் துறைக்கு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட கடன் தொகைகளை மாற்றி அமைக்கவும், தனியாா் மற்றும் கூட்டுறவு சா்க்கரை ஆலைகள் பெற்ற சா்க்கரை வளா்ச்சி நிதிக் கடன்களை மாற்றி அமைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சா்க்கரை ஆலைகளின் நிதிப் புழக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு நடவடிக்கை வேண்டும். மேலும், தமிழ்நாட்டின் கரும்பு விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில், தமிழ்நாட்டின் சா்க்கரைத் தொழில் துறையை புனரமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

வெளியானது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்!

அமலுக்கு வந்தது இ-பாஸ் நடைமுறை

ஜார்க்கண்ட் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்

SCROLL FOR NEXT