புதுதில்லி

தில்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

DIN

தில்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்துக்கு வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. சில இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாகவும், வேட்பாளர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
தில்லி பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட கல்லூரிகளில் 52 இடங்களில் வாக்குச்சாவடி மையங்களில் காலை நேரக் கல்லூரிகளுக்காக வியாழக்கிழமை காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. மாலை நேரக் கல்லூரிகளுக்காக மாலை 3 மணி முதல் இரவு 7.30 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. 1.3 லட்சத்துக்கு அதிகமான மாணவர்கள்  வாக்காளர்களாக உள்ளனர். 
இந்தத் தேர்தலில் அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) சார்பில் தலைவர் பதவிக்கு அக்ஷித் தாஹியாவும், துணைத் தலைவர் பதவிக்கு பிரதீப் தன்வாரும், பொதுச் செயலர் பதவிக்கு யோகித் ரதியும், இணைச் செயலர் பதவிக்கு ஷிவாங்கி கேர்வாலும் போட்டியிடுகின்றனர்.
என்எஸ்யுஐ சார்பில் தலைவர் பதவிக்கு சேத்னா தியாகியும், இடதுசாரி கட்சிகளின் ஆதரவு பெற்ற அமைப்பான ஏஐஎஸ்ஏ-யின் சார்பில் தலைவர் பதவிக்கு தாமின் கெயின் ஆகியோர் போட்டியிடுகின்றன. மொத்தம் 16 வேட்பாளர்கள் போட்டியிடும் இந்தத் தேர்தலில் 4 பெண் வேட்பாளாவர். அதில், இரண்டு பெண் வேட்பாளர்கள் சுயேச்சையாக போட்டியிடுகின்றனர்.
நார்த் கேம்பஸில் உள்ள 17 வாக்குப் பதிவு மையங்களில் சுமார் 38 சதவீத வாக்குகள் பதிவாகியதாக தெரிவிக்கப்பட்டது. இந்தப் பகுதியில் மட்டும் 400க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
வாக்குப் பதிவு நடைபெற்ற நார்த் கேம்பஸை காங்கிரஸ் மூத்த தலைவர் ஜே.பி. அகர்வால் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு வந்து பார்வையிட்டு மாணவர்களிடன் பேசினார்.
காங்கிரஸ் கட்சியின் ஆதரவு பெற்ற இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் (என்எஸ்யுஐ) பொறுப்பாளர் ருசி குப்தா, "ஆர்யாபட்டா கல்லூரியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. என்எஸ்யுஐ-க்கு வாக்களித்தால் வாக்குப் பதிவானதற்கான சமிக்ஞை காட்டவில்லை' என்று குற்றம்சாட்டினார். இது குறித்து தேர்தல் அதிகாரி கூறுகையில், "ஆர்யாபட்டா கல்லூரியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. 152 வாக்குகள் பதிவான அந்த இயந்திரம் பின்னர் மாற்றப்பட்டது' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூத்துக்குடி பொறியியல் கல்லூரியில் 250 மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகள்

கோவில்பட்டியில் யுகாதி திருவிழா

வதேரா, டேவிட் பங்களிப்பில் மும்பை - 144/7

குமரி மாவட்டத்தில் பரவலாக கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

தோ்தல் நடத்தை விதி: இதுவரை ரூ.179 கோடி ரொக்கம் பறிமுதல்

SCROLL FOR NEXT