புதுதில்லி

காரை விற்பதாகக் கூறி இருவரிடம் ரூ.3 லட்சம் கொள்ளையடித்தவர் கைது

DIN

ஓ.எல்.எக்ஸ்.ஸில் எஸ்யுவி காரை விற்பதாகக் கூறி இருவரிடம் ரூ.3 லட்சத்தைக் கொள்ளையடித்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று போலீஸார் தெரிவித்தனர். இது குறித்து குருகிராம் காவல் துறை செய்தித் தொடர்பாளர் சுபாஷ் போகன் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: 
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பித் நகரில் வசிக்கும் ஷிஷ் ராம் துவாடே என்பவர் புகார் அளித்திருந்தார். அவர் ரூ.4.51 லட்சத்தில் கார் வாங்குவது தொடர்பாக விற்பனையாளருடன் ஒப்பந்தம் செய்ததாகவும், பின்னர் அந்த நபர் குருகிராமுக்கு வரச் சொன்னதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, கடந்த மே 21-ஆம் தேதி அவர் தனது நண்பருடன் குருகிராம் வந்த போது, இரண்டு இளைஞர்கள் ஒரு மெட்ரோ நிலையத்திலிருந்து அவர்களை வரவேற்று குருகிராம் ஆழ்வார் சாலைக்கு வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர். சுமார் 25-30 கி.மீ. தொலைவுக்குப் பயணித்த பிறகு, அந்த இளைஞர்கள் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் வாகனத்தை நிறுத்தினர். 
அப்போது, அங்கு ஏற்கெனவே தயாராக நின்றிருந்த அவர்களது மூன்று கூட்டாளிகள் வாகனத்தில் ஏறிக் கொண்டனர். அவர்கள் துவாடே மற்றும் அவரது நண்பரை துப்பாக்கி முனையில் அழைத்துச் சென்று ரூ .3 லட்சத்தை கொள்ளையடித்தனர். 
 போண்ட்ஸி காவல் நிலையத்தில் துவாடே அளித்த புகாரின் பேரில் உரிய சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும், துவாடே அளித்த தகவலின் பேரில் பணத்தைப் பறித்துச் சென்றவர்களின் மாதிரி உருவப்படம் ஓவியம் மூலம் தயாரிக்கப்பட்டது.
அந்த உருவப் படம் மொஹமத்பூர் குஜ்ஜாரில் வசிக்கும் இக்பால் (எ) பல்லாவின் உருவத்துடன் பொருந்தி இருந்தது. மேலும், அவர் குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர் என்பதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, போண்ட்ஸி பகுதிக்கு அருகே வெள்ளிக்கிழமை இரவு அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது, பணத்தை கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டார். மேலும், வாகனத்தில் வந்த மற்றவர்களின் அடையாளங்களைக் கண்டறிய, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT