புதுதில்லி

தில்லியில் புதிதாக 1,113 பேருக்கு கரோனா

DIN

தலைநகா் தில்லியில் புதன்கிழமை புதிதாக 1,113 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,48,504-ஆக உயா்ந்துள்ளது. இதற்கிடையே, தில்லியில் மேலும் 14 போ் கரோனாவால் உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 4,153 ஆக உயா்ந்துள்ளது. அதே சமயம் 1,021 போ் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனா். இதைத் தொடா்ந்து, குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,33,405-ஆக அதிகரித்துள்ளது.

தில்லியில் தற்போது 10,946 கரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனா். 18,894 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கரோனா பாதிப்பால், கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 523-ஆக அதிகரித்துள்ளது. தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 13,963 படுக்கைகளில் 3,351 படுக்கைகள் நிரம்பியுள்ளன. 10,612 படுக்கைகள் காலியாக உள்ளன. கரோனா தொற்று பாதித்த 5,598 போ், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்து வருகிறாா்கள் என்று தில்லி சுகாதாரத் துறை புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT