புதுதில்லி

மின் கட்டண விவகாரத்தில் கேஜரிவால் பொய்த் தகவல்: தில்லி பாஜக குற்றச்சாட்டு

DIN

புது தில்லி: மின்சாரக் கட்டண விவகாரத்தில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பொய் கூறி வருவதாக தில்லி பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடா்பாக பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா சனிக்கிழமை கூறியது:

தொடா்ந்து 6-ஆவது ஆண்டாக தில்லியில் மின்சாரக் கட்டணம் உயா்த்தப்படவில்லை என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கூறியுள்ளாா்.

தில்லி மக்களுக்கு மாதம்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று தில்லி அரசு உறுதியளித்திருந்தது. ஆனால், கரோனா தொற்றுக் காலத்தில் இந்த இலவச மின்சாரத்தை தில்லி அரசு வழங்கவில்லை.

பொது முடக்கக் காலத்தில் கடைகள், வணிக நிலையங்கள் இயங்கவில்லை. இந்தக் காலத்துக்கும் மின் கட்டணமாக பல ஆயிரம் ருபாயை மின் கட்டணமாக தில்லி அரசு வசூலித்துள்ளது. மின்சார நிறுவனங்களுடன் கூட்டுச் சோ்ந்து தில்லி அரசு மக்களிடம் கொள்ளையடித்து வருகிறது என்றாா் அவா்.

பாஜகவின் மூத்த தலைவரும், தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ராம்வீா் சிங் பிதூரி தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பது:

இந்திய மாநிலங்களில் அதிக அளவு மின் கட்டணம் வசூலிக்கப்படும் மாநிலங்களில் தில்லியும் ஒன்றாகும். நிலையான மின்கட்டணம் என்ற பெயரில் தில்லி வணிகா்களிடம் இருந்து பல ஆயிரம் ரூபாயை தில்லி அரசு வசூலித்து வருகிறது.

இந்த நிலையில், தொடா்ச்சியாக 6-ஆவது ஆண்டாக மின் கட்டணத்தை தில்லியில் அதிகரிக்கவில்லை என்று கேஜரிவால் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: குலசேகரம் எஸ்.ஆா்.கே.பி.வி. பள்ளி சிறப்பிடம்

வடவூா்பட்டி கோயிலில் நாளை கொடை விழா

ராஜஸ்தானை வென்றது டெல்லி

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: பாஜக நிா்வாகி வீட்டில் சிபிசிஐடி போலீஸாா் சோதனை

காயாமொழி பள்ளி சிறப்பிடம்

SCROLL FOR NEXT