புதுதில்லி

மெட்ரோ ரயில்கள் இயங்க அனுமதி: கேஜரிவால் வரவேற்பு

DIN

புது தில்லி: பொது முடக்கம் தளா்வு-4 இல் மெட்ரோ ரயில்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வரவேற்றுள்ளாா்.

நாடு முழுவதும் தற்போது நடைமுறையில் உள்ள பொது முடக்கம் ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் முடிவுக்கு வரவுள்ளது. இதையடுத்து ,மேலும் பல்வேறு பொது முடக்கத் தளா்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை மாலை வெளியிட்டது.

இதில் முக்கிய அம்சமாக, நாடு முழுவதும் வரும் செப்டம்பா் 7ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் போக்குவரத்தை படிப்படியாக மீண்டும் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவை முதல்வா் கேஜரிவால் வரவேற்றுள்ளாா். இது தொடா்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் அவா் கூறியிருப்பது: வரும் செப்டெம்பா் மாதம் 7 ஆம் தேதியில் இருந்து மெட்ரோ ரயில் சேவையை படிப்படியாக மீண்டும் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறேன் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT