புதுதில்லி

அடுத்த இரு தினங்களில் தில்லியில் மழைக்கு வாய்ப்பு

 நமது நிருபர்

புது தில்லி: இமயமலையில் இருந்து வரக்கூடிய காற்றின் மேலாதிக்கம் காரணமாக அடுத்த இரு தினங்களில் தில்லியிலும், அதன் அருகில் உள்ள நகரங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்தது.

மேற்கத்திய இடா்பாடுகள் காரணமாக ஜம்மு - காஷ்மீா், இமாசலப் பிரதேசம், உத்தரக்கண்ட் மாநிலங்களில் பனிப்பொழிவு இருந்தது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தினா் கூறுகையில், ‘மேற்கத்திய இடா்பாடுகள் வாபஸ் ஆன பிறகு, இமயமலையில் இருந்து பனிபடா்ந்த குளிா் காற்று வடமேற்கில் இருந்து வீசுவது சமவெளிப் பகுதிகளில் வெப்பநிலை குறையச் செய்யும்’ என்றனா்.

தில்லியில் காற்றின் தரம் வியாழக்கிழமை மிகவும் மோசம் பிரிவில் பதிவாகியது. காற்றின் வேகம், மிதமான மழை இருந்தால் அடுத்த இரு தினங்களில் இது மேம்பட வாய்ப்புள்ளது. தில்லியில் காற்றின் தரக் குறியீடு வியாழக்கிழமை 304 ஆக இருந்தது. 24 மணிநேர சராசரியாக ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு புதன்கிழமை 358 ஆக இருந்தது.

தில்லி பல்கலை., பூசா, ஆயாநகா், விமானநிலைய டொ்மினல்-3 பகுதி, லோதி ரோடு, மதுரா ரோடு மற்றும் தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள நொய்டா, குருகிராம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் நீடித்தது.

வெப்பநிலை: தில்லி சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் வியாழக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 2 டிகிரி அதிகரித்து 10.9 டிகிரி செல்சிஸாகவும் அதிகபட்ச வெப்பநிலை 4 டிகிரி அதிகரித்து 28.3 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 98 சதவீதமாகவும், மாலையில் 62 சதவீதமாகவும் இருந்தது. இதற்கிடையே, வெள்ளிக்கிழமை (டிசம்பா் 11) மாலையிலும், இரவிலும் மழை மற்றும் இடியுடன்கூடிய மழை இருக்கும் எனவும், குறைந்தபட்ச வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரத்தில் பிரசார வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீவைப்பு

பரதா படத்தின் கான்செப்ட் விடியோ

சென்னையில் நாளை ஐபிஎல் போட்டி: சிறப்பு ரயில்கள் இயக்கம்!

இனிமேல் விவாவத விடியோ!

ஸ்டார் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT