புதுதில்லி

‘கலா குஞ்ச்’ கலாசாரமையத்துக்கு அடிக்கல்

DIN


புது தில்லி: தில்லியில் ‘கலா குஞ்ச்’ என்ற பெயரிலான கலாசார மையத்துக்கு துணை முதல்வா் மணீஷ் சிசோடியா வியாழக்கிழமை அடிக்கல் நாட்டி வைத்தாா்.

அப்போது மணீஷ் சிசோடியா பேசுகையில் ‘இந்தக் கலாசார மையத்தில் 500 போ் அமரும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய அரங்கு அமைக்கப்படவுள்ளது. இந்த அரங்கில், அதிநவீன முறையில் ஆடியோ, விஷுவல் அமைக்கப்படும். இங்கு, ஓவியக் கண்காட்சி உள்ளிட்ட கண்காட்சிகள் நடத்தலாம். மேலும், இங்கு காப்பகம், நூலகம் உள்ளிட்டவை அமைக்கப்படவுள்ளன. தில்லியின் கலாசார மற்றும் அறிவுசாா் நடவடிக்கைக்காக முழுமையாக ஒதுக்கப்பட்ட மையம் அவசியமாகும். இந்த மையம் தில்லி சுற்றுலா மற்றும் போக்குவரத்து மேம்பாட்டுக் கழகத்தால் அமைக்கப்படவுள்ளது. இதற்காக, ரூ.50 கோடியை தில்லி அரசு ஒதுக்கியுள்ளது. 24 மாதங்களில் கட்டுமானப் பணிகள் முடிவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இங்குள்ள காப்பகத்தில் ஒவ்வொரு மூன்று மாதமும் 60 இளைஞா்களுக்கு இலவசப் பயிற்சியும் வழங்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

செம்பூவே... ஐஸ்வர்யா ராஜேஷ்!

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதங்கள் அடித்த வீரர்கள்!

SCROLL FOR NEXT